முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்தில் முன்பகுதி சேதம்; ஒரே நாளில் சரிசெய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்

விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி ஒரே நாளில் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. 

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக வேகமான அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காந்தி நகரில் கடந்த 1ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்று காலை மும்பையிலிருந்து காந்தி நகருக்குச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பட்வா-மணி நகர் ரயில் நிலையங்களிடையே சென்றபோது தண்டவாளத்தைக் கடந்த மாட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது.

இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கைரத்பூர் மற்றும் வத்வா நிலையங்களுக்கு இடையே காலை 11:20 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் என்ஜின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், இருப்பினும், செயல்பாட்டின் எந்தப் பகுதியும் சேதமடையவில்லை என்று கூறினார்.

மும்பை சென்ட்ரல் டிப்போவில் பராமரிப்புப் பணியின் போது முன் பெட்டியின் நோஸ் கோன் கவர் புதியதாக மாற்றப்பட்டு, ரயில் மீண்டும் சேவையில் வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் விபத்து நடந்து 24 மணிநேரத்திற்குள் ரயிலின் முன்பகுதி சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும். வந்தே பாரத் ரயில் என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்-கரு.நாகராஜன்

G SaravanaKumar

கொரோனா: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

Web Editor

‘மேலாண்மை ஆணையரின் அத்துமீறலை தடுத்திடுக’ – இரா.முத்தரசன்

Arivazhagan Chinnasamy