முக்கியச் செய்திகள்

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோதுமை விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்படுவது தடை செய்யப்படுதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கோதுமை இருப்பு வைப்பற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், அண்டை நாடுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிற நாடுகளின் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கவும் இந்த தடை விதிக்கப்படுகிறது என்றும், பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசு ஏற்கெனவே வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பிற நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யலாம் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அப்போது, கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனெனில் நாட்டில் கோதுமை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறினார்.

பிரமர் மோடி அண்மையில் மேற்கொண்ட ஜெர்மனி பயணத்தின்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், உலகளாவிய பற்றாக்குறைக்கு மத்தியில் நம் நாட்டின் விவசாயிகள் உலகுக்கு உணவளிக்க முன்வந்துள்ளனர் என்று கூறினார். மேலும், மனிதகுலம் நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா ஒரு தீர்வைக் கொண்டு வரும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

Halley Karthik

மாசுக் கட்டுப்பாட்டு நிதி: அதிமுக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

Halley Karthik