குடியரசு தலைவர் அளித்த தேநீர் விருந்து : பிரதமர் மோடி பங்கேற்பு!

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் இன்று…

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளில் குடியரசு தலைவர் தேநீர் விருந்து அளிப்பார்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேநீர் விருந்து குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.