ஐசிசி உலகக்கோப்பை தொடர்; டிக்கெட் விற்பனைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன் பதிவு தொடங்கியிருக்கிறது. 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன் பதிவு தொடங்கியிருக்கிறது. 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

போட்டிகளை காண்பதற்கு டிக்கெட் பெற விரும்புபவர்கள் https://www.cricketworldcup.com/register என்ற வலைப்பக்கத்தில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.