முக்கியச் செய்திகள் சினிமா

6 நாட்களில் ரூ.450 கோடி வசூல் – அலப்பறை கிளப்பும் “ஜெயிலர்” திரைப்படம்…!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் இந்திய அளவில் ரூ.300 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.150 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் வெளியான 6 நாட்களில் இந்திய அளவில் ரூ.300 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.150 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன், கபாலி, எந்திரன் 2.0 திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினியின் நான்காவது படமாக ஜெயிலர் ரூ. 300 கோடி வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர்

Halley Karthik

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்

EZHILARASAN D

லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…

Web Editor