முக்கியச் செய்திகள் இந்தியா

சுதந்திர தின கொண்டாட்டம்; தேசிய கொடி விற்பனை அதிகரிப்பு

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை அடுத்து தேசிய கொடியின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த வருடம் முழுவதும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எற்பாடு செய்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாட்டின் 75 பகுதிகளில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் தொடக்க நிகழ்ச்சியாக குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியில் இருந்து 21 நாட்கள் தண்டி பகுதிக்கு செல்லும் பாத யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவது, நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹர் ஹர் ட்ரையாங்கா என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஹர் ஹர் ட்ரையாங்கா என்பது ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் என்பது பொருளாகும். இதையடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் 75வது சுதந்திர தினத்தின் போது நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15ந்தேதி வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் தேசிய கொடியின் விற்பனை அதிகரித்துள்ளதாக கேரள மாநில கடைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ‘ஹர் கர் ட்ரையாங்கா’ பிரச்சாரம் அறிவிக்கப்பட்ட பிறகு, மூவர்ணக் கொடிக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறினார்.

கர்நாடக மாநில கடைக்காரர் ஒருவர் கூறுகையில், பிரதமர் மோடி அறிவித்த ‘ஹர் ஹர் ட்ரையாங்கா’ பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு, மூவர்ணக் கொடிக்கான தேவை அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Halley Karthik

அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!

Jeba Arul Robinson

போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு

Gayathri Venkatesan