இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 48 ரன்களும், அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களும் விளாசினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கண்டது. இருப்பினும், ஆட்டத்தின் இறுதியில் இந்திய வீராங்கனைகளின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி, வெற்றி பெற்றது.