பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணி புனே சென்றடைந்தது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வரும் 19ம் தேதி சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் புனேயில் நடைபெற உள்ளதையடுத்து, இந்திய அணியினர் நேற்று புனே சென்றடைந்தனர்.
https://twitter.com/IamRavindraNain/status/1713551149662617851
இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.







