ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் ஏற்றுள்ளார்.
டெல் அவிவ் நகரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டின் ஒற்றுமை குறித்தும், ஹமாஸ் அமைப்பினரை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலை அழித்து விடலாம் என முதலில் ஹமாஸ் அமைப்பு நினைத்ததாகவும், இஸ்ரேல் ராணுவம் தான் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க உள்ளதாகவும் கூறினார். இஸ்ரேல் ராணுவத்திற்கு உறுதுணையாக நாட்டு மக்கள் உள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.







