ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையேயான போருக்கு மத்தியில் ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரஸின் ‘மனிதாபிமான வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள்ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இநிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டணி குட்டரெஸ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலில் ஐ.நா., வலியுறுத்தும் 2 மனிதாபிமான கோரிக்கைகள் இவைதான், பிணைக்கதிகளை நிபந்தனையின்றி ஹமாஸ் உடனே விடுவிக்க வேண்டும். காசாவில் மனிதாபிமான உதவி செய்வதற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. காசாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.” இவ்வாறு ஆன்டணி குட்டரெஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
The @UN has stocks available of food, water, medical supplies & fuel in Egypt, Jordan, the West Bank & Israel.
They can be dispatched within hours.
To ensure delivery, our staff need to be able to bring these supplies into and throughout Gaza safely, and without impediment.
— António Guterres (@antonioguterres) October 15, 2023







