இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரோஹித் சர்மா 12 ரன்னிலும் சுப்மன் கில் 21 ரன்னிலும் அடுத்தெடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்களிலும் அவுட் ஆகினார்.
இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலியும் முர்பி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அதற்கு பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மொத்தம் 33.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அண்மைச் செய்தி :திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி
அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டிராவிஸ் ஜடேஜா பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆனால் உஸ்மான நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் எடுத்தார். அடுத்தடுத்து வந்தர் லபுசாக்னே 31 ரன்களிலும் ஸ்மித் 26 ரன்களிலும் அவுட் ஆகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.