பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு; அதிபருக்கு எதிராக போராடும் மக்கள்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறிய்ப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும்,…

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறிய்ப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நேற்று வெளியான அதிகாராப்பூர்வ அறிவிப்பின்படி பிரேசிலில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சத்தை கடந்தது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா மரணங்களால் கோபமுற்ற மக்கள் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிரம்ஸ்கள் இசைத்து, கோஷங்கள் எழுப்பி அதிபர் போல்சனாரோவை பதிவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனாவால் அதிபரின் நிர்வாக திறமின்மையின்மையே இவ்வளவு பேர் கொரோனாவுக்கு பலியாக காரணமெனவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பைசர் நிறுவனம் தடுப்பூசிகளை விற்பதற்கு அரசை அனுகியதாகவும், ஆனால், அரசு தடுப்பூசி வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை எனவும் கூறியுள்ளனர். சுமார் 21 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் இதுவரை சுமார் 2 கோடி மக்கள் மட்டுமே முழு தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.