சமூக வலைதளத்தில் வைரலாகும் தனுஷின் தந்தையர் தின வாழ்த்து!

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த ஜகமே…

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. தற்போது இவர் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளம் முழுவதும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் தங்களது தந்தையுடனான மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரண்டு மகன்களுடன் கடலில் தான் பயணம் செய்யும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, தந்தையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தந்தையர் தின வாழ்த்துக்கள், குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் நீங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையம் முழுவதும் வைரலாகிறது. இதுவரை இந்த புகைப்படத்தை சுமார் 7 லட்சத்து 66 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளன்ர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.