பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவை தொழிற்சாலைகளின் உற்பத்தி மையமாக மாறறவும் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், பிரதமர் நரேநதிரமோடியின் ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தொழில் முதலீட்டை அதிகரித்தல், புதுமையை புகுத்துதல், சிறந்த கடடமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் உற்பத்தி துறையை வலுவாக முன்னெடுத்து, உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் முதன்மையான கொள்கையாக இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்படுவதால், இளைஞைர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 27 முக்கிய துறைகளில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2014-15ஆம் ஆண்டில் 45.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நேரடி அந்நிய முதலீடு, 2020-21ஆம் நிதியாண்டில் 81.72 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்கு 440.01 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தால், தொழில் செய்வதற்கான விதிமுறைகளும், நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொழில் தொடங்குதல், வரிசெலுத்துதல் ஆகியவற்றில் மறுசீரமைப்புகள் மேற்கொண்டதன் காரணமாக உலக வங்கியின் தொழில் செய்தல் குறித்த 2020ஆம் ஆண்டு அறிக்கையின்படி, எளிய தொழில்நடைமுறைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
விமானம், ரசாயனங்கள், பெட்ரோலிய ரசாயனங்கள் ஆகியவற்றில் அந்நிய முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் உள்ள மெர்சிடஸ், டாடா மோட்டார், சுசிகி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. தற்போது இந்தியாவில் உபயோகிக்கப்படும் ட்ரோன்களில் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை மாற்றி ட்ரோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ட்ரோன் தயாரிப்பு மையமாக உருவாக்கும் வகையில், உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ட்ரோன் மற்றும் ட்ரோன் உற்பத்தி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பில் 5000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்கப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாட்டில் தற்போது 60 கோடி ரூபாயாக உள்ள ட்ரோன் தயாரிப்பு தொழில் வருவாய், 2024-ல் 900 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும், நேரடியாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இது உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.