முக்கியச் செய்திகள் இந்தியா

மேகதாது அணை விவகாரம்; கர்நாடக பாஜகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கெடு விதித்துள்ளார்.

 

கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் தமிழ்நாடு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து  மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம். அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை உண்டு என தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மேகதாது திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பசவராஜ் பொம்மை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடினார். மத்திய அரசின் அனுமதியை பெற்றும், ஏன் இன்னும் திட்டத்தை தொடங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்காவிட்டால், மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் கிருஷ்ணா, மகதாயி திட்டங்களையும் அமல்படுத்த மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் 13 மொழிகளில் நடைபெறுகிறது ‘பசு அறிவியல்’ தேர்வு!

Halley karthi

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

Halley karthi

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

Jeba Arul Robinson