முக்கியச் செய்திகள் உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்க்யூரா மனாபே, கிளாஸ் ஹசில்மேன், ஜியார்ஜி பாரிஸி ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், மருத்துவம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் படாபெளடியன் (Ardem Patapoutian) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் உணர்ச்சி எவ்வாறு நம் உடலின் நரம்பு மண்டலத்தில் உணர்ச்சித் தூண்டலை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விரிவான ஆய்வை இருவரும் மேற்கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்க்யூரா மனாபே மற்றும் கிளாஸ் ஹசில்மேன் ஆகிய இருவருக்கும் பூமியின் காலநிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும் புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்ததாக கணித்ததற்கும் வழங்கப்பட்டது. மேலும் ஜியார்ஜி பாரிஸிக்கு உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காகவும் வழங்கப்பட்டது.

1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஐந்து துறைகளின் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
SHARE

Related posts

உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!

Gayathri Venkatesan

ஐரோப்பாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Halley karthi

150 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்: பிரமாண்டமாக உருவாகும் காவல் அருங்காட்சியகம்

Halley karthi