முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி & கோ ஆகிய நிறுவனங்களிலும், அண்ணா நகரில் உள்ள இண்டிகிரேடட் அலுவலகத்திற்கு தொடர்புடைய பத்ரி என்பவரின் வீட்டிலும், சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளத்தில் கனமழை – மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தல்

Web Editor

மின் கட்டண உயர்வு அறிவிப்பை தமிழக அரசு கைவிட ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Web Editor

சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி : ஜான்பாண்டியன்!

EZHILARASAN D