கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்ற போது வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் ஈரோடு சாலையில் உள்ள அன்னை அடுக்குமாடிக்குடியிருப்பில் சக்தி மெஸ் கார்த்தியின் சீல் வைக்கப்பட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதேபோல் கோதை நகர் உள்ளிட்ட 7க்கும் மேற்ப்பட இடங்களில் நேற்று ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில் கரூர் ஜவகர் பஜாரில் செயல்படும் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.





