முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை

தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் 5வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காக்காச்சி நாலு முக்கு மாஞ்சோலை போன்ற பகுதியில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இரண்டாவது நாளாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது மேலும் ஒகேனக்கலுக்கு பரிசல் இயக்கவும் குளிக்கவும் 8 நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.  மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 8 நாளாக தடை விதித்துள்ளது.

நெல்லை மாவட்டம், களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் தனிந்தது. 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ள களக்காடு வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மணிகண்டனின் சுவாரஸ்யமான 7 பதில்கள்..!

Niruban Chakkaaravarthi

காணாமல் போன சிறுவனை ‘வாட்ஸ் அப்’ மூலம் மீட்ட போலீசார்

G SaravanaKumar

அதிமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது: மு.க.ஸ்டாலின்

Saravana