கல்லக்குடி பேரூராட்சி ஊறுப்பினர்கள் பதவியேற்பு.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் பதவியேற்றனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.…

திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் பதவியேற்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. மொத்தமாக 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கான பதவி ஏற்பு விழா ஒவ்வொரு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அந்தந்த கமி‌ஷனர்கள் புதிய கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று காலை 10 மணி முதல் பதவி ஏற்பு விழா ஒவ்வொரு அலுவலகங்களிலும் உற்சாகமாக நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதி மொழியை வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் பதவியேற்றனர். 15 வார்டுகள் கொண்ட கல்லக்குடி தேர்வுநிலை பேரூராட்சியல் 9வார்டுகள் திமுக கூட்டணியும், 1 வார்டு அதிமுகவும், 2 வார்டுகளில் அமமுகவும், 3 வார்டுகளில் சுயேட்சை உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றனர். தொடர்ந்து, வரும் மார்ச் 4 ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்க உள்ளனர்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.