சந்திர கிரகணத்தை முன்னிட்டு 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைஅடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு  இன்று இரவு மணி 7.05 முதல் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  29ஆம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு  இன்று இரவு மணி 7.05 முதல் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

29ஆம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2. 22 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் துவங்குவதற்கு 6 மணி நேரம் முன்னதாக கோயில்களில் நடைகளை அடைப்பது வழக்கம்.  இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு  இன்றிவு 7.05 முதல் அதிகாலை மணி 3:15 வரை 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:’காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!

சகஸ்ர தீப அலங்கார சேவை,  மாற்றுத்திறனாளிகள்,  மூத்த குடிமக்கள்
ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ஆகியவையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் இலவச உணவு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் முடிந்த பின் நாளை அதிகாலை 3.15 மணி அளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்படும்.  அதன் பின் கோயிலை சம்பிரதாயரீதியில் சுத்தம் செய்வார்கள்.  தொடர்ந்து நடத்தப்படும் சுப்ரபாதம்,  கோமாலை,  அர்ச்சனை ஆகிய சேவைகளுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.