திருச்செந்தூரில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணி!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் நிறைவேற்றும் வண்ணமாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலகோங்களால் ஆன பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அவ்வாறு செலுத்தப்பட்ட உலோகங்களை கோவில் நிர்வாகம் சார்பில் சேமித்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்க நகைகளை தங்க
கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர் கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்க நகைகளை,
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தலைமையில் 6 தங்க நகை மதிப்பீடாளர்கள்,
தங்கத்தினை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கோயிலில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளில் இருந்து அரக்குகள்,
கற்கள் மற்றும் அழுக்குகளை பிற பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது. தங்க
நகைகளில் சேர்ந்துள்ள பிற உலோகங்களான செம்பு போன்றவைகளை பிரித்தெடுத்து,
தூய தங்கமாக உருக்குவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பணிகள்
ஒரு மாதம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கு.பாலமுருகன்

TCR KOVIL GOLD JWELL MELT WORK

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.