வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியல் தயாரிப்பு பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த வைகோ, தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதற்கு யாருடைய அழுத்தம் காரணமாக இருக்கும் என தான் கருதவில்லை எனக் கூறிய வைகோ, மனசாட்சிபடி நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்சால் அதிகம் பாதிக்கப்பட்டது தான் தான் எனக் கூறிய வைகோ, இந்த தேர்தலில் ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என நம்பிக்கை தெரிவித்தார்.