தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் புதிதாக கொரோனாவின் ஜேஎன்1 வகை திரிபு தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால்…

தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் புதிதாக கொரோனாவின் ஜேஎன்1 வகை திரிபு தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இது குறித்த பதற்றம் மக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தின் நிலவரப்படி இந்தியாவில் மட்டும் புதிதாக 609 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3368 ஆக உள்ளது. தற்போது வரை நோயில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 4.4 கோடி ஆகும். ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாக முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.