தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி ஆகிய மூன்று இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 3 இடங்களில் வெயிலானது சதம் அடித்து இருந்து நிலையில் இன்றைய தினமும் தமிழ்நாட்டில் 3 இடங்களில் வெயிலானது சதம் அடித்து உள்ளது.
இன்றைய தினத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் 100.76°F வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும் கரூர் பரமத்தியில் 100.4°F வெப்பமானது பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







