ராணிப்பேட்டையில், இஸ்ரோ ராக்கெட் வடிவத்தில் நின்று பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்படும் இந்து வித்தியாலயா பள்ளியில் உள்ள மைதானத்தில் பத்தாயிரம் அடியில் சந்திரயான்-3 குறித்த வண்ண ஓவியத்தை மாணவர்கள் வரைந்தனர்.
நிலவில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் இறங்கி வரலாற்று சாதனை படைத்த நிகழ்வை போற்றும் விதமாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் சந்திராயான்-3 விண்கல மாதிரி வடிவில் நின்ற மாணவர்கள் மரியாதை செலுத்தினர். இது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.







