பிலிப்பைன்ஸ் விமான விபத்து: 17 பேர் பலி, 40 பேர் படுகாயம்

பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் பிலிப்பைன்ஸில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு 85 பேருடன் C-130 ரக…

பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் பிலிப்பைன்ஸில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு 85 பேருடன் C-130 ரக ராணுவ விமானம் புறப்பட்டுச் சென்றது. எனினும், புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே விமானம் மாயமானது. பின்னர், படிகுள் என்ற மலைகிராமம் அருகே அந்த விமான கீழே விழுத்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதா, அல்லது நாசவேலை காரணமாக இந்த சம்பவம் நேரிட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.