டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழ்நாட்டிற்கு கூடுதல் பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








