முடிச்சூரில் ஸ்ரீதேவி ஆதிபாரசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில்
திருநங்கைகள் நடத்திய மாயன கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள ஸ்ரீதேவி ஆதிபாரசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 5 வது ஆண்டாக மயான கொள்ளை திருவிழா நேற்று (மார்ச்.18) வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இந்த மயான கொள்ளை திருவிழாவை திருநங்கைகள் நடத்தினர். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் திருநங்கைகளின் சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு சேவல் அறுத்து பலியிடப்பட்டது. அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







