இந்தியாவில் 7 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக சரிந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக சரிந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக திடீரென அதிகமான கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 7 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்தது. தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 11 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 43 லட்சத்துக்கு மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

சமீபகாலமாக அதிகரித்து வந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 69 நாட்களுக்கு பிறகு குறைந்தது. 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 123 குறைந்தது. ஆனால் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.