ஆங்கில கால்வாயில் 72 கி.மீ. நீந்தி சாதனை படைத்த மாணவன்; சென்னையில் உற்சாக வரவேற்பு!

இங்கிலாந்தில், ஆங்கில கால்வாயில் 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் இடையே அமைந்துள்ள ஆங்கில கால்வாயை…

இங்கிலாந்தில், ஆங்கில கால்வாயில் 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் இடையே அமைந்துள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடக்கும் நிகழ்வில், இந்தியாவை சேர்ந்த 6 பேர் கொண்ட குழு பங்கேற்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயது மாணவர் சினேகன் என்பவர் இடம்பெற்றிருந்தார்.

இக்குழுவினர் 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், தாயகம் திரும்பிய மாணவர் சினேகன், பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய மாணவர் சினேகன், ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிர பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.