முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள்

நூறு முறை பிறந்தாலும் அழியாத காதல்…


ஜ. முஹம்மது அலீ

கட்டுரையாளர்

திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த அசோகன், ஆரம்ப காலத்திலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். நண்பர்களான நடிகர்கள் பாலாஜி, ஜெமினி கணேசன் உதவியால் திரையுலகில் நுழைந்தார். அவ்வையார் திரைப்படத்தில் ஆன்டனியாக நடித்தவரை மணப்பந்தல் திரைப்படத்தில் அசோகன் என பெயர் மாற்றினார் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. இது சத்தியம், தெய்வத்திருமகள், காட்டுராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார் அசோகன்.


குடும்பத்துடன் சென்னையில் வசித்த கோயம்புத்தூரை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்த அசோகன், அவரை திருமணம் செய்ய விரும்பினார். காதல் என்றாலே குடும்பத்தில் கடும் எதிர்ப்பு வரத்தானே செய்யும்.. பெண்ணின் தந்தை அப்போதைய அரசில் உயர் பதவியில் இருந்ததால், அசோகனுக்கும் அச்சம் ஏற்பட்டது. அசோகனின் காதல் விவகாரம் எம்ஜிஆருக்கு தெரியவர…”நீ அழைத்தால் அந்தப்பெண் வருவாரா” என எம்ஜிஆர் கேட்க, வருவார் என அசோகன் சொல்ல… கோடம்பாக்கம் தேவாலயத்தில் சரஸ்வதியை கைப்பிடித்தார் அசோகன். தேவாலயத்தின் கதவுகளை மூடி மாப்பிள்ளை தோழராக முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்த எம்ஜிஆர் புதுமணத் தம்பதியை காரில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


வில்லத்தனம் மட்டுமின்றி கவுரவ வேடம், குணச்சித்திர நடிப்பையும் தந்தவர் அசோகன்… பாத காணிக்கை திரைப்படத்தில் அசோகன் பாடி நடித்த வீடுவரை உறவு,, பாடலில் கண்ணதாசனின் வரிகளும், டிஎம் சவுந்தரராஜன் குரலும் அசோகனை மிகச்சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. ஜெய்சங்கருடன் நடித்த ‘இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தில் அசோகன் தனது சொந்தக் குரலில் ‘இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்’ என்ற பாடலை பாடினார். 80க்கும் மேற்பட்ட படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ள அசோகன் எம்ஜிஆரை வைத்து ‘நேற்று, இன்று, நாளை’ திரைப்படத்தைத் தயாரித்தார். திரையில் வில்லனாக நடித்தாலும், காதலித்த பெண்ணை கைப்பிடித்து நிஜத்தில் கதாநாயகனாகவே இருந்த அசோகன் தனது 52வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்

G SaravanaKumar

2026 தேர்தலில் 60 இடங்களில் வென்றால் பாமக ஆட்சி: ராமதாஸ்

EZHILARASAN D

முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு சீல் – நகராட்சி சேர்மன் அதிரடி

Web Editor