இயக்குநர் மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக அவர் மனைவியும் நடிகையுமான சுகாசினி எச்சரித்துள்ளார்
பிரபல இயக்குநர் மணிரத்னம் நேற்று (ஜூன் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மற்ற திரைபிரபலங்கள் போல இயக்குநர் மணிரத்னமும் நேற்று ட்விட்டரில் இணைந்ததாகக் கூறப்பட்டது.
அவர் பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் ஏராளமான திரைபிரபலங்களும் ரசிகர்களும் இணைந்தனர். அவருக்கு அதில் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஆனால், அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது பிறகு தெரியவந்தது.
இதுபற்றி இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இயக்குநர் மணிரத்னம் ட்விட்டரில் இணைந்திருப்பதாக ஒருவர், @Dir_ maniratnam என்கிற பக்கத்திலிருந்து ட்வீட் செய்துள்ளார். இது பொய், இவர் போலி நபர். இதுபற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.







