தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வரும் 2-ஆம் தேதி அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று கூறினார். தமிழகத்தில் தொடரும் மின்தடையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்குமுன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வெட்டு தொடர்பான பிரச்னை குறித்து பதிலளித்து இருந்தார். அப்போது, “பாஜக ஆளும் மாநிலங்களில் மின்வெட்டு எவ்வாறு நிகழ்கிறது. தமிழகத்தில் மட்டுமே மின்வெட்டு இருப்பது போல் தோற்றத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக தான், சொந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








