நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இதுவரை 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் மட்டும் 115 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியா முழுவதும் 3,01,34,445 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,91,28,267 பேர் குணமடைந்துள்ளனர். 6,12,868 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 3,93,310 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 30.8 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







