”நம் விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக, புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின் போது மஹிளா மகா பஞ்சாயத் என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்று தடையையும் மீறி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
I’m so sad to see the visuals of our Athletes…. Please solve this ASAP 🙏
— Irfan Pathan (@IrfanPathan) May 28, 2023
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நம் விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். தயவு செய்து இதை விரைவில் தீர்க்கவும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த டிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.







