டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீராங்கனைகளின் சிரித்தபடி புகைப்படங்களை பற்றி பஜ்ரங் புனியா விளக்கம் அழித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், பேரணி நடைபெற்றது. போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
இதனிடையே, கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகத் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ”சிலர் இதுபோன்ற பொய்யான புகைபடத்தை பரப்புகிறார்கள். இந்த போலி படத்தை வெளியிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
IT Cell वाले ये झूठी तस्वीर फैला रहे हैं। हम ये साफ़ कर देते हैं की जो भी ये फ़र्ज़ी तस्वीर पोस्ट करेगा उसके ख़िलाफ़ शिकायत दर्ज की जाएगी। #WrestlersProtest pic.twitter.com/a0MngT1kUa
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 28, 2023
இதுபோன்ற புகைப்படங்களை AI உதவியுடன் மிக எளிதில் செய்யலாம் என சமூக வலைதளங்களில் அதன் செயல்முறையை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Where @RizviUzair demonstrates how a photograph has been digitally altered to show the wrestlers smiling https://t.co/91wgWclqqN
— Joy (@Joydas) May 28, 2023







