பைக் சுற்றுப் பயணம் மோற்கொண்டு வரும் நடிகர் அஜித், தனது ரசிகர் ஒருவரிடம் கிண்டலாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் ஏகே61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி என பலரும் நடித்து வருகின்றனர். இப்படப்பிடிப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக அஜித் இடைவெளி எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித் அதன் பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். அந்தப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங்கை நிறைவு செய்தவுடன் தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் அஜித்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது மீண்டும் இமயமலைப் பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். இந்தப் பயணத்தின்போது கார்கில், லடாக், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு நடிகர் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வரைபடத்தையும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சுற்றுப் பயணத்தில் ரசிகர் ஒருவர் 3 நாட்களாக அஜித்தை தேடுவதாக அவரிடம் கூறியதும், நான் என்ன கொலைகாரனா, கொள்ளைகாரனா என்று நகைச்சுவையாக கேட்கும் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
https://twitter.com/AjithNetwork/status/1570793600874872835?t=EgVC0Vih-27n8NSn4A47Lw&s=08
-ம.பவித்ரா









