முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பாஜக சார்பில் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள இசை
அமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத் மாதா கே ஜி என கோஷமிட்டு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

பாஜக சார்பில் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு
திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா அறிவிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய
நிலையில் அதில் இளையராஜா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற காரணத்தால் நேற்று நடைபெற்ற
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இளையராஜா பங்கேற்கவில்லை. இதனால்
இதுவரை இளையராஜா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்காமல் உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து விமான மூலம் சென்னை வந்த இளையராஜாவிற்கு
பாஜக சார்பிலும் திரைத்துறை சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி
சீனிவாசன், எம்.ஆர். காந்தி, சி.கே. சரஸ்வதி உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.

அதேபோல் திரைத்துறை சார்பில் இயக்குனர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே.
செல்வமணி உள்ளிட்டோ ரும் இளையராஜாவை வரவேற்றனர்.

விமான நிலையம் வந்திறங்கிய இளையராஜாவிற்கு அங்கு கூடியிருந்த அவரது
ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் உற்சாக கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

குறிப்பாக பாஜக தொண்டர்கள், பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு இளையராஜாவை
வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக இடைவெளியை மறந்து மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

Gayathri Venkatesan

யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்

Halley Karthik

கைக்குழந்தையுடன் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் மீட்பு

EZHILARASAN D