தமிழ் படித்தால்தான் இனி வேலைவாய்ப்புகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ் படித்தால் தான் இனி வேலை வாய்ப்புகள் அதிகம் என்று திருச்சுழி அரசு கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். திருச்சுழி சட்டமன்றld தொகுதி கிராமப்புறங்களால் நிறைந்து…

தமிழ் படித்தால் தான் இனி வேலை வாய்ப்புகள் அதிகம் என்று திருச்சுழி அரசு
கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

திருச்சுழி சட்டமன்றld தொகுதி கிராமப்புறங்களால் நிறைந்து இருப்பினும் இங்கு
உள்ள மாணவர்கள் மேற்படிப்பைத் தொடரும் வகையில் கல்லூரிகள் இல்லை, தனியார் கல்லூரிகள் கூட இல்லாததால் இன்று பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்காக அருப்புக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரைக்கு செல்கின்றனர். போதிய வசதி இல்லாததால் பள்ளி படிப்போடு மாணவர்கள் நிறுத்திக் கொள்ளும் நிலை தொடர்கிறது. இந்த காரணத்தால் பெண் குழந்தைகளின் உயர்கல்வி விகிதமும் குறைந்துள்ளது. எனவே, திருச்சுழியில் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக நீண்டாண்டாக இருந்தது.

அதனை நிறைவேற்றும் விதமாக விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பொதுமக்கள்
மற்றும் மாணவர்களின் 11- வருட கோரிக்கையான புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கடந்த ஜீலை மாதம் திறந்து வைத்தார்.
இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொத்தம் 240- இடங்கள் மட்டுமே
உள்ள நிலையில் இதற்காக ஆன்லைன் மூலம் 5 பாடப்பிரிவுகளுக்கு சுமார்
1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

அதைத்தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கான சிறப்பு
கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பாடப்பிரிவை தேர்வு செய்தனர். அவர்களுக்கான முதலாம் ஆண்டு கல்லூரி துவக்க விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முதலாம் ஆண்டு வகுப்பினை துவக்கிவைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு காலத்தில் மேற்கு திசையில் ஒருவர் சொன்னார் என்று பாரதியார் சொன்னார். தமிழ் படித்தால் வாய்ப்பு இல்லை, தமிழ் படிப்பதற்கு ஆட்கள் கிடையாது, தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற நிலைமை மாறி இன்றைக்கு தமிழ் படித்தால் தான் வேலை வாய்ப்புகளில் உங்களுக்கு உறுதி அளிக்கக்கூடிய திட்டத்தினை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழ் படித்தால் தான் வாய்ப்புகள் என்று பார்த்தவுடன் இன்று வேலை வாய்ப்பு தேடுபவர்கள் தமிழை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள் என்றார்.

மேலும், முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை
வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மணிமாறன் மற்றும் ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.