அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் கால்பந்து வீரரும் பாஜக பிரமுகருமான கல்யாண் செளபே தேர்வு செய்யப்பட்டார்.
85 ஆண்டு கால வரலாற்றில் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தலைவராக முன்னாள் கால்பந்து வீரரே தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும். கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தலில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் பாய்சங் பூடியா போட்டியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், அவரை 45 வயது மதிக்கத்தக்க கல்யாண் செளபே, 33 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். பாய்சங் பூடியா ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிறந்தார் கல்யாண் செளபே. கிழக்கு பெங்கால் அணிக்கும், மோகன் பகான் அணிக்கும் கோல்கீப்பராக விளையாடி இருக்கிறார். இவர் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடியதில்லை.
பின்னர் பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோ்வியைத் தழுவினார்.
இதையும் படியுங்கள்: ஹாங்காங்கை பந்தாடிய இந்தியா – சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்
பூடியாவும், செளபேவும் கிழக்கு பெங்கால் அணியில் ஒன்றாக விளையாடியிருக்கின்றனர்.
இதனிடையே, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு கர்நாடக கால்பந்து சங்கத்தின் தலைவர் என்.ஏ.ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாளர் பதவிக்கு அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிபா அஜய் தேர்வு செய்யப்பட்டார்.
நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த 14 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.