முக்கியச் செய்திகள் சினிமா

நடித்தால் ஹீரோவாகவே நடிப்பேன் – நடிகர் ராமராஜன்

இதுவரை 44 படங்களில் நான் சோலோ ஹீரோவாக நடித்துள்ளேன், 50வது படம் வரை சோலோ ஹீரோவாகதான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை டி நகரில் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இத்திரைப்படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் தயாரித்துள்ளார். இயக்குநர் ரஹேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை டி நகரில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமராஜன் நடிக்கும் படம் இதுவாகும். இந்த படத்தின் டீஸர், படக்குழுவினர் மற்றும் மன்றத்தினரால் இணைந்து 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராமராஜன், “நான் ராதா ரவி வீட்டில் குடியிருக்கும் போது தான் எனது முதல் படம் பண்ணினேன், இப்போது 4 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளேன். இந்த படத்தில் ஹீரோ என்பவர் கதையும் திரைக்கதையும் தான். இரண்டாவது ஹீரோ இந்த படத்தின் டைட்டில் தான். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. இந்த நிகழ்ச்சிக்குக் கனகா வரதா இருந்துச்சு, ஆனால் சந்தான பாரதி வந்ததால் அவர் வரவில்லை” என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

5 வருடம் திரையரங்கத்தில் போஸ்டர் ஒட்டி, டிக்கெட் கிழித்து என்னென்னவோ செய்து, துணை இயக்குநர் ஆகி அதன் பின் நடிக்க வந்தேன். எல்லோரும் சொன்னார்கள் நான் ஹீரோவாக தான் நடிப்பார் இவர் என. அப்படி இல்லை, நல்ல கதை இருந்தால் நான் நடிப்பேன் என்ற அவர், 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் தாறுமாறாக நடிக்க நான் ஒன்றும் தரம் கெட்ட நடிகன் இல்லை எனச் சொன்னவர் தலைவர் எம் ஜி ஆர். அவர் போல நான் ஒரு நல்லவரைப் பாலோ செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என் வாழ்வில் நான் நினைத்தது 50 படங்களில் சோலோ ஹீரோவாக நடிக்க வேண்டும் என. இதுவரை 44 படங்களில் நான் சோலோ ஹீரோவாக நடித்துள்ளேன், இந்த படமும் அப்படி தான். வேறு யாரும் அப்படி நடித்தது இல்லை. 50 படம் வரை நான் சோலோ ஹீரோவாக தான் நடிப்பேன் எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்

EZHILARASAN D

விஜய், அஜித் இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்

EZHILARASAN D