திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நத்தம் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்துக் கொண்டாடினர். பின்னர் பேசிய ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை வரவிடாமல் செய்வதாகவும், 4 மாதங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஆளும்கட்சியாக இருக்கும்போதும் விவசாயிகளுக்காக திமுக உழைத்துக் கொண்டிருப்பதாகவும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.







