உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 தொடருக்கான டிக்கெட் விற்பனை Book My Show இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கியது.
வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் தொடங்கியது. இந்திய அணி பங்கேற்காத பயிற்சி ஆட்டங்கள் மற்றும் பிற நாடுகள் மோதும் உலகக்கோப்பை போட்டிகளுக்கான லீக் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. நேற்று MasterCard பயனாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான டிக்கெட் விற்பனை நடைபெற்றது.







