ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை – இலங்கைக்கு எதிராக 269 ரன்கள் குவித்த இந்திய அணி

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

13வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது   இன்று  தொடங்கியது. இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்தும் இத்தொடரானது இன்று தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இன்றைய முதல் போட்டியில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. கவுகாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த  இந்திய அணி 47 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக அமன்ஜோத் கௌர் 56 பந்துகளில் 57 ரன்களும், தீப்தி சர்மா 53 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.