மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்

தமிழ்நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.…

தமிழ்நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்  முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறைச் செயலாளராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறைச் செயலாளராகவும், நிதித்துறைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் அமுதா, உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசின் வரலாற்றில் 3வது முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், போக்குவரத்துத் துறைச் செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராகவும், சுற்றுலாத்துறைச் செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறைச் செயலாளராகவும், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறைச் செயலாளராக டாக்டர் பி.சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.