கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியை கூறிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தலில் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வரும் காலங்களில் கர்நாடகாவில் மேலும் தீவிரமாக செயல்பட்டு மக்களுக்கு பாஜக சேவையாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.








