ரஜினிக்காகவும், எனது குழந்தைகளுக்கும், குடும்பத்திற்குமான முதல் பாடலை எழுதியுள்ளேன் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது இப்படத்தின் மொத்த பாடல்களும் வெளியிடப்பட்டது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரத்தமாரே’ பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி தற்போது வரை இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
https://twitter.com/VigneshShivN/status/1687846239839391744







