“தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்”- தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்நல்லுகண்ணுவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் வந்து பார்ப்பதை கைவிட வேண்டும்  என்று வேண்டுகோள் விடுப்பதாகவும்தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.