முக்கியச் செய்திகள் உலகம்

முட்டாள் ஒருவர் கிடைத்ததும் CEO பதவியை ராஜினாமா செய்வேன் -எலான் மஸ்க்

இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்த பிறகு மிக விரைவில் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை
தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து புளூ டிக் அக்கவுண்டிற்கு மாதம் ரூ.660 கட்டணம் வசூலிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

கடந்த வாரம்  உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கினார். பிற சமூக வலைதளங்களின் பதிவுகளை ட்விட்டரில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறுபதிவி செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு  தெரிவித்து, அது போன்ற கணக்குகளை முடக்க போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என ட்வீட் செய்து ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவிக்குமாறு கூறியிருந்தார். இதற்கு 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் அப்பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பதில் அளித்துள்ளனர்.

இதனால் அவர் தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிப்பாரா? அல்லது வேறு
ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன்!.அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை இயக்குவேன்” என்று மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்விட்  தற்போது சர்ச்சையாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது” -ஸ்டாலின்

Halley Karthik

இயக்குநர் சீனு ராமசாமிக்கு குடும்பத்தினர் தந்த இன்ப அதிர்ச்சி!

EZHILARASAN D

ஜெய்பீம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

G SaravanaKumar